Saturday 20 February 2016

BIBLE SAYS ISLAMIC HIJAB [ABAYA]

No comments:

முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவது பெண் அடிமைத்தனம் என்றால்?


கன்னியாஸ்திரிகள் முக்காடு அணிவது என்ன மாதிரியான அடிமைத்தனம் ....


முஸ்லிம் பெண்கள் ஆடையில் உடலை மறைத்து முக்காடு அணிந்து அபாயா போன்ற ஆடை வகைகளை அணிந்து இருக்கும் புகைபடத்தை பதிந்துசில அறியாத கிருஸ்துவ நண்பர்கள்கிண்டல் செய்த பதிவை பார்க்க நேரிட்டது ..


அந்த சகோதர்களுக்கு பதிலாகவும் மற்றும் கிருஸ்துவ நண்பர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த பதிவை எழுதிகிறேன் .....
முதல் விஷயம் ஆடை உணவு போன்ற அத்யாவசிய விஷயங்கள் தனி மனித சுதந்திரம் ,,,,


இதில் யாருக்கும் தலையிட அனுமதி இல்லை


நான் மேலே பதிந்த தலைப்பு தவறு
 ஆடையில் அடிமைத்தனம் கிடையாது ,ஒரே சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பெண்கள் ஒரு ஆடையும் சில பெண்கள் ஒரு ஆடையும்
ஏற்ற இரக்கத்தை காண்பிக்க உடுத்தினால் மட்டுமே அடிமைத்தனம் ஆகும் 

இஸ்லாத்தில் அணைத்து பெண்களும் உடலை மூடும் படியான ஆடை அணிய சொல்லும் பொழுதுஇது அடிமைத்தனம் அல்ல


அதே வேளையில் அந்த பெண்களை இது போன்ற ஆடைதான் உடுத்த வேண்டும் என்று நிர்பந்திப்பது தவறு ...


சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பிரச்னைக்கு அரசாங்கம் சட்டம் போட்டாலே தவிரஒரு முஸ்லிம் பெண் உடலை மறைக்கும் ஆடை அணியாமல் வீதியில் நடந்தால் அவளை கொண்டு வந்து மரணதண்டனை கொடுக்க இஸ்லாம் சொல்லவில்லை ....


தமிழகத்தில் பதர் சயீத் இந்தியாவில் தஸ்லிமா நஷ்ரீன் போன்றோர்கள் இஸ்லாமிய ஆடை அணியாமல் வளம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்


[ தஸ்லிமா நஸ்ரினை எதிர்த்ததற்கு காரணம் அவர் எழுதிய புத்தகம் தானே தவிர அவரின் 5 திருமண விஷயத்தை விமர்சித்தோ ஆடை விஷயத்தை விமர்சித்தோ எதிர்க்கவில்லை]


இன்னும் எத்துனையோ முஸ்லிம் பெயர் தாங்கி நடிகைகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ..


யாரையும் எங்கேயும் போய் இஸ்லாமிய ஆடை அணிய மறுக்கிறாள் என்று சாகடிக்கவில்லை ....


சாகடிக்கவும் மார்க்கத்தில் அனுமதியில்லைஆனால் இஸ்லாம் கட்டளைஇடுகிறது இது போன்று ஆடை அணிய


குர்ஆன் னில் 24 வது அத்யாயம் 30 வது வசனம்
அதே போன்று 24 வது அத்யாயம் 31 வது வசனத்தில் பெண்களே உங்கள் முந்தானைகளை உடல்களில் சரியாக போடுங்கள் என்றும்
33; 59 இல் கூறுகிறது ..


அதே வேளையில் முகத்தை மறைக்கவேண்டும்எனபது கட்டாயம் இல்லை ..


முஹம்மது நபி காலத்தில் எத்துனையோ பெண்கள் தங்கள் முகத்தை தெரியும் பொருட்டு நபியிடம் கேள்வி கேட்டதாக வரலாறு உண்டு ...


இஸ்லாமிய ஆடை பற்றி எத்துனையோ பேர் பேசிவிட்டார்கள்என்னஎன்ன நன்மைகள் உள்ளது என்று ஏற்கனவே பேசிவிட்டார்கள் ..நான் அதை பற்றி பேசவில்லை மாறாக


பைபிள் கூறும் அபயாவை பார்க்க போகிறோம் ........


பைபிளின் அழகான வசனம் ..


புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவல்ல ,ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள் ,புருஷன் ஸ்திரீக்காக ஸ்ரிஸ்த்டிக்க பட்டவனில்லை ஸ்திரேயே புருஷனுக்காக ஸ்ருச்திக்க பட்டவள் ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டு கொள்ளவேண்டும் ,1 கொரிந்தியர் .11.4-10


ரெபெக்கலும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கை கண்டபொழுது ஊழிய காரனை நோக்கி அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதர் யார் என்று கேட்டாள் ,
அவர் தான் என் எஜமானன் என்று ஊழியக்காரன் சொன்னான் அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டு கொண்டால் ..ஆதியாகமம் 24;63-65


பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ள அழகான வசனம் இது
இதையே கர்த்தருக்கு தன்னை அர்பணித்த கிருஸ்துவ கன்னியாஸ்திரிகள் கடைபிடிகின்றனர்


[உதாரணம் அன்னை தெரசா]


இது சொல்ல கூடிய கருத்து பெண்கள் முக்காடு அணிவது இதையே தான் இஸ்லாமும் சொல்லுகிறது ...


எந்த ஆடவனும் தனது தங்கையின் உடலையோ மனைவியின் உடலையோ ஆங்காங்கு காண்பிப்பது போன்று உடுத்துவதை விரும்ப மாட்டன் ,,,,,,
ஒரு வேலை நன்றாக ஆடை அணிந்தாலும் அந்த பெண்களுக்கு தெரியாமல் விலகிவிட வாய்ப்பு உண்டு ..


அந்த இடத்தில தமது கேவலமான இச்சையை பார்த்து போக்கி கொள்ள தான் நாடுவானே தவிர சகோதரியே உங்களின் உடையை சரி செய்யுங்கள் என்று எவனும் கூற மாட்டான்


நமேக்கேன் வம்பு என்ற ரீதியிளையாவது பேசாமல் போய் விடுவான்


இதை தவிர்க்கவே இஸ்லாம் ஆடை கண்ணியம் பேண சொல்லுகிறது ..இயற்கையாய் என் மனைவி எனக்கு மட்டும் என்று கணவன் நினைப்பான் 

அந்த இயற்கையை இஸ்லாம்சொல்லுகிறது ,...


அவ்வளவுதான்

இனிமேல் விமர்சனம் செய்யும் தொப்புள் கொடி கிருஸ்துவ நண்பர்கள் தங்களின் வேதத்தில் உள்ளவசனத்தையும் சேர்த்து விமர்சனம் செய்யுங்கள் .....


Mohamed Shajahan [shams deen]

freedom fighter CAPTAIN ABBAS ALI ..

No comments:
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
[இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் உங்கள் மீது உண்டாவதாக]

சுதந்திர போராட்டத்திற்கும் இன்றைய சுதந்திர இந்தியாவிற்கும் சம்பந்தமே இல்லை என்றாலும்

அடிக்கடி இவர்களை நினைவு படுத்தி கொண்டு இருக்க வேண்டும் இல்லையெனில் கோட்சேவும் சுந்ததிர தியாகி

என்று நாளடைவில் கூறினாலும் ஆச்சர்ய படுவதிற்கில்லை ..
அப்படி காலத்தாலும் மதவாதாலும் மறக்கடிக்கப்பட்ட மாபெரும் வீரர் தான் இந்த கமேண்டர்..

ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில
தமிழில் இவரை பற்றி எழும் முதல் கட்டுரை இது தான்
ஏனெனில் இவரை பற்றி எந்த தமிழ் ஊடகமும் இதுவரை எழுதவில்லை ...
காரணம் தெரியவில்லை ..

முதன் முதலில் நான் தான் இவரை பற்றி தமிழில் எழுதுகிறேன் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும்
பொய்யான விஷயங்கள் இல்லாமல் சரியான தகவலை தர வேண்டும் என்ற கட்டாயத்தினாலும்

கொஞ்சம் தெளிவாக விரிவாக எழுதுகிறேன் பதிவு நீளமாக இருந்தாலும் சிரமம் இல்லாமல் படியுங்கள் ..

கேப்டன் அப்பாஸ் அலி
இவர் பிறந்தது உத்திர பிரதேசத்தில் அட் குர்ஜா
எனும் இடத்தில

சுதந்திர வேட்கையினால்
1929 இல் தடை செய்யப்பட்ட இயக்கமான பகத் சிங்கின்
Naujawan Bharat Sabh ,அதாவது Youth Society of India .
என்ற இயக்கம் அப்பொழுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அலிகார் முஸ்லிம் யுனிவர்சிட்டியில் படித்து
கொண்டு இருந்த இவருக்கு
Kunwar Muhammed Ashraf என்பவரின் தொடர்பு ஏற்பட்டது இவரால்
ஆள் இந்தியா ஸ்டூடன்ட் பெடெரெஷன் இல்
தன்னை இணைத்து கொள்கிறார்.

1939 இல் பிரிடிஷ் இந்தியாவின் கமேண்டர் படையில் இணைந்து கொண்டு இரண்டாம்
  உலக போரில் இந்தியாவிற்காக சண்டைஇடுகிறார் ..


வெள்ளையனுக்கு எதிராக சுதந்திர வேட்கை ஆங்காங்கே வெடித்து கொண்டு இருந்த சமயத்தில்
1945 இல் சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயனுக்கு எதிராக இராணுவம் தயாராகிறது என்று கேள்விப்பட்டவுடன் ...

பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மியில் இருந்து தனது பதவியை தூக்கி எரிந்து விட்டு சுதந்திர இந்தியாவிற்காக நேதாஜி சுபாஷின்
இராணுவத்தில் INA இந்தியன் நேஷனல் ஆர்மியில் சேர்ந்து கொண்டார்..

ஆங்கிலேயனுக்கு எதிராக பல தாக்குதலை புதிதாக உருவான இந்தியன் நேஷனல் ஆர்மி தாக்கியது ..

இதை திட்டம் வகுத்து கொடுத்து தலைமை தாங்கியது
கேப்டன் அப்பாஸ் அலி தான் ,,

இந்நிலையில் கேப்டன் அப்பாஸ் அலியை அபுல் கலாம் ஆசாத்தல் உருவாக்கப்பட்ட சுதந்திர முழக்கமிடும் இயக்கமான

ஆசாத் ஹிந்த் பவுஜ் என்ற இயக்கத்தில் இவர் இருக்கிறார் என்று இவரை கைது செய்து மரணதண்டனை குற்றவாளியாக சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு ..


ஆனால் இவரின் வியூகம்.
கொடுத்து விட்டு போன தடங்களை தாக்கியது
கேப்டன் சொல்லை தட்டாத இந்தியன் நேஷனல் ஆர்மி
விளைவு இந்தியா சுதந்திரம் ....

1947 இல் இந்திய அரசு இவரை சிறையில் இருந்து விடுவித்தது ..
வெளியேறிய கேப்டன் அப்பாஸ் அலியை
உத்திர பிரதேசத்தில் இயங்கிய அரசியல் கட்சியான
unit of Samyukta Socialist Party (SSP) யில் பொது செயலாளர்
அந்தஸ்து கொடுத்து கவுரவித்தது ..
1978 இல் உத்திரபிரதேசத்தில் Legislative Council 6 வருடம் பணியாற்றினார் ..

பிறகு சன்னி வக்பு போர்ட் ஆப் இந்தியாவில்
பணியாற்றுமாறு இந்தியா அரசு கேட்டுகொண்டதிர்கிணங்க
6 வருடம் அங்கும் பணியாடியுள்ளார் ..
அது மட்டுமின்றி Na Rahoon Kisi ka
Dastenigar-Mera Safarnama என்ற இரண்டு நூற்களை எழுதி ஜனவரி 3 2009 இல் வெளியிட்டுள்ளார் ...

கேப்டன் அப்பாஸ் அலி 11-10-2014 ல் 94 வது வயதில்
காலமானார்......

இதையெல்லாம் போட்டோ சாப் அல்ல
செய்தியை திரித்து சொல்வதும் இல்லை ..
இவைகளெல்லாம் வரலாற்று உண்மைகள் ...
யார் உண்மையான தேசபக்தர்கள் ???

தேசத்தை துண்டாடிவிட்டு ஆங்கிலேயனுக்கும் சமரச கடிதம் கொடுத்து இந்திய சுதந்திர விடுதலைக்கும் எனக்கும்
சம்பந்தம் இல்லை என்று எழுதி கொடுத்தவர்கள் எல்லாம் தேசபக்தர்கள் என்றால்
இவர்கள் யார் ???

இவர்கள் யாருக்காக போராடினார்கள் ???

முஸ்லிம்கள் என்ற ஒரே காரனத்திற்காக எங்களின்
 தியாகங்கள் வீணாக்க படுகிறதே ???

சுபாஷ் சந்திர போஸ் மகாத்மா காந்தி என்றால் உடனே தெரியவைதவர்களுக்கு
கேப்டன் அப்பாஸ் அலியை பற்றி ஏன்
தெரியவைக்க முடியவில்லை ??

Mohamed Shajahan [SHAMS DEEN]
 
back to top