Friday 26 June 2015

குர்ஆன் விடுவித்த சவாலை 14 நூற்றாண்டுகளாக யாருமே ஏற்க முன் வரவில்லையே ஏன் ?

No comments:

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைவன் கொடுத்த அற்புதம் தான் இந்த அல் குர்ஆன் ,,,

இதில் மனித சமுகத்தை நல் வழி படுத்த பலவிதமான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் நல்லவனாக இருந்தாலும் கெட்டவனாக இருந்தாலும் அனைவருக்கும் அறிவுரை வழங்கும் அற்புதம் தான் இந்த குரான்.

முதல் அதிசயமே எந்த நூலாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இது பழங்கால கட்டுக்கதை என்று அடுத்து வருகிற சமூகம் புறக்கணித்துவிடும்.



அல்லது இது அறிவியலுக்கு புறம்பான செய்தியாக உள்ளது என்று மக்களால் ஒரம்கட்டபடுவார்கள்,



ஆனால் 10 ம் நூற்றாண்டிற்கும் போன நூற்றாண்டிற்கும் இன்றைய நூற்றாண்டிற்கும் ஏன் இனி வரபோகும் நூற்றாண்டிற்கும் வாழும் மக்களுக்கு ஏற்ப ஒத்துபோகின்ற ஒரே நூல் புனித குர்ஆன் மட்டுமே



.....அதனால் தான் இன்னும் கண்டிபிடிக்க படாத அறிவியலையும் தொட்டு செல்கிறது குர்ஆன் யாருக்கு தெரியும் இன்னும் 200 வருடம் கழித்து புதிய புதிய கண்டுபிடிப்புகள் வரலாம் அது குர்ஆனில் உள்ளது என்று அப்பொழுது கண்டுபிடிக்கலாம்.



சரி இபொழுது உள்ள வசனத்திற்கு வருவோம் அந்த வசனம் இதோ ...



என்ன, இவர்கள் இறைத்தூதர் இதனைச் சுயமாக இயற்றியுள்ளார் என்று கூறுகின்றார்களா?
நீர் கூறும்: “(இக் குற்றச்சாட்டில்) நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக்கொண்டு வாருங்கள். மேலும், அல்லாஹ்வை விடுத்து (உதவிக்காக) யார் யாரை உங்களால் அழைக்க முடியுமோ அவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள்!”...



இதில் கவனிக்க வேண்டிய வார்த்தை இதுதான்



நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக்கொண்டு வாருங்கள். மேலும், அல்லாஹ்வை விடுத்து (உதவிக்காக) யார் யாரை உங்களால் அழைக்க முடியுமோ அவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள்!”



இது ஒரு சவால் இதுபோன்ற ஒரு வசனத்தை நீங்கள் கொண்டு வாருங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.



இதன் அர்த்தத்தை அதிகபேர் தவறாக புரிந்து கொள்கின்றனர் முஸ்லிம்கள் உட்பட ,,,,



இதன் காரணமாக சில யூதர்கள் அரபு கவிதை போன்ற சில வார்த்தைகளை பயன்படுத்தி பாருங்கள் நாங்களும் உருவாக்கி விட்டோம் என்று கூறினார்கள்..



இந்த வசனத்தின் உண்மைத்தன்மையை விளங்கியவன் உலகமே திரண்டு நின்றாலும் குரான் போன்ற ஒரு வார்த்தையை கொண்டு வரமுடியாது எப்படி தெரியுமா ?



உதரனத்திற்க்கு குர்ஆனில் இப்படி ஒரு வசனம் வரும் நேம் இந்த உலகை படைத்தோம்..



அதேபோன்றும் நாமே மழையை பூமியின் மீது பொழிய செய்கின்றோம்.



அதேபோன்று நாமே மனிதனை ஒரு துளி நீரில் இருந்து படைத்தோம்..



ஒரு மனிதன் ஒரு நூலை எளுதிகிறான் என்றால் இதுபோன்ற வசனங்களை அவனால் எழுத முடியாது



அப்படி எழுதினாலும் அவனை மக்கள் முட்டாளாகவே பார்க்கத்தான் செய்வார்கள்



காரணம் அந்த நூலை எழுதியவன் ஒரு மனிதன் மற்றவனை போன்று உண்ணுகிறான் குடிக்கிறான் உறங்குகிறான் .



இப்படி யோசித்து பாருங்கள் உங்கள் கூடவே பழகிய ஒரு நண்பன் திடீரென்று நான் தான் இந்த உலகத்தை படைத்தேன் நான் தான் மனிதனை உருவாக்கினேன் என்று சொன்னால் நீங்கள் அந்த நண்பரை என்ன சொல்வீர்கள் ?



அதான் இதுபோன்று குரான் வசனத்தை படைத்தவனால் மட்டுமே சொல்ல முடியும் அதக்கு உண்டான கர்வமும் ஆணவமும் படைத்த அல்லாஹ்விற்கே உண்டு
அதற்குண்டான முழு தகுதியும் அவனுக்கு உண்டு



ஒட்டுமொத மனித சமூகம்சேர்ந்து கொண்டு நான் தான் இந்த உலகை படைத்தேன் என்றோ நான் தான் இந்த உலகில் உள்ள படைப்பை உருவாக்கினேன் என்று குர்ஆனில் உள்ள வசனத்தை போன்று ஒரு வார்த்தையை மனிதன் சொல்லமுடியாது ?



குர் ஆனின் சவால் சவால்தான்
உலகமே ஓன்று சேர்ந்தாலும் முறியடிக்க
முடியாத சவால்...



உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தைத்தான் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், ஊகமோ சத்தியத்தின் தேவையை சற்றும் நிறைவேற்றாது.
இவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.

அல் குர்ஆன் :10:36. Shams Deen
 

 
back to top