Monday 7 September 2015

No comments:
இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கம் அல்ல பதினான்கு நூற்றாண்டுகளாக விமர்சனத்தை எதிர்கொண்டு வளர்ந்துவரும் மார்க்கம். அதே போன்று இஸ்லாத்தை பற்றி விமர்சிக்கும் சகோதர்கள் அதிகமானோர் கையில் எடுக்கும் வாதம் இஸ்லாத்தில் பெண்களின் அடிமைத்துவம் எனபது தான் பெண்களுக்கு இஸ்லாத்தில் போதிய சுதந்திரம் இல்லை என்பதும் பெண்களை மதிக்கவே மாட்டார்கள் எனபது தான் , ஆனால் உலகத்தில் பெண்களை பொருட்டாகவே மதிக்காத காலத்தில் இஸ்லாம் சொல்லி இருக்கும் சட்டம் எவர்களுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை ஆகவே அவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளவும் இந்த பதிவை பதிகின்றேன் ,,,,, உலகத்தில் பெண்களுக்கு ஆன்மாக இருக்கிறதா என்று பட்டி மன்றங்கள் நடந்து கொண்டு இருந்ததும் இதே நிகழ்காலம் தான். நமக்கு நினைவு தெரிந்து நமது தமிழகத்தில் நம்முடைய மூதாதையர்களை மேல் சட்டை அதாவது ரவிக்கை அணியவிடமால் அநியாயம் செய்தது சமீபத்தில் தான் உடன்கட்டை என்ற பழக்கம் இருந்ததும் நமது மண்ணில் தான் அதாவது கணவர்கள் [ஆண்கள்] இறந்து விட்டால் நெருப்பை மூட்டி அந்த நெருப்பில் இறந்தவரின் மனைவியை [பெண்ணை] உயிரோடு கொளுத்திய நிகழ்வு நடந்ததும் நம் மண்ணில் தான்... இது ஏதோ கட்டுகதைகளும் அல்ல நமது முன்னோர்களின் வேதனையான சாதனைகளில் இதுவும் ஒன்று . இதையெல்லாம் இங்கு சொல்வதற்கு காரணம் நாம் நம்மை பரிசோதிக்கவே சரி இஸ்லாம் கூறும் பெண்களின் நிலை என்ன தெரியுமா ? இதோ பாருங்கள் 'பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டு சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகமுண்டு அவ்வாறே பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டு சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகமுண்டு அதிலிருந்து சொத்து குறைவாக இருந்தாலும் சரியே அதிகமாக இருந்தாலும் சரியே இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட பாகமாகும் அல்குர்ஆன்; 4,7 நமக்கு தெரிந்து போன 10 அல்லது 15 ஆண்டுகளில் தான் தமிழகத்தில் பெண்களுக்கும் பாகம் உண்டு என்ற சட்டம் முன்னால் முதல்வர் கருணாநிதியால் பிறப்பிக்க பட்டது ஆனால் இஸ்லாம் கூறும் சட்டத்தால் 14 நூற்றாண்டுகளாக தமிழகம் மட்டுமல்ல உலகில் உள்ள இஸ்லாமிய வீடுகளில் சொத்து பிரிப்பில் பெண்களுக்கும் பாகமுண்டு என்பது எத்துனை பேருக்கு தெரியும் . உலகமே பெண்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத காலத்தில் பெண்சிசு கொலை செய்துவந்த நேரத்தில் இறைவனின் வார்த்தை பெண்களுக்கும் உங்கள் சொத்தில் பாகம் உண்டு என்பது விமர்சனம் செய்யும் நண்பர்கள் 14 நூற்றாண்டுக்கு முன்னரே பெண்களுக்கு சொத்தில் பாகம் கொடுக்க சொல்லி இருக்கிறதே என்று இதையும் சேர்த்து விமர்சனம் செய்யுங்கள் ,,,,, shams deen
 
back to top