Thursday 23 July 2015

சூரியனின் வேகம் பற்றி அல் குர்ஆன்..

No comments:
 சூரியனின் வேகம் பற்றி அல் குர்ஆன் 

அல் குர்ஆன் ஒரு விஞ்ஞான நூல் அல்ல 

மக்களுக்கு விஞ்ஞானத்தை போதிக்க வந்த அறிவியல் புத்தகம் அல்ல 

மக்களுக்கு அறிவுரை சொல்ல கூடிய நல்வழிகாட்டிதான் இந்த நூல். 

பிறகு ஏன் விஞ்ஞானத்தை சொல்ல வேண்டும் .

அதற்கும் காரணம் இருக்கிறது ...

அறிவுரையை கேட்காத மனிதன் ஆச்சர்யத்தை கேட்க்க வருவான் 

ஆச்சர்யத்தை மட்டும் படித்துவிட்டு அறிவுரையை உதாசீனபடுத்த முடியாது .

இதுவே படைத்தவனின் அறிவு 

.சரி இன்றைய விஞ்ஞான வசனத்திற்கு வருவோம் 

பொதுவாக இன்றைய நூற்றாண்டில் சூரியன், 

சந்திரன் பால்வழி மண்டலம் ,

என்று வானியலை பேசக்கூடிய நூற்கள் ஏராளம் ஏராளம்.

ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகத்தில் 

போன நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் உள்ளது 

எனபது ஆச்சரய்ம் தானே ...

கிட்டத்தட்ட இயேசு கிறிஸ்து அலைஹிஸலாம் வாழ்ந்து 600 ஆண்டுகளுக்கு பின்னர்

ஏறக்குறைய இன்றிலிருந்து 1430 வருடங்களுக்கு பின்னால் நீங்கள் இருப்பதாக யூகித்து கொண்டு

அடுத்து வரும் குர்ஆன் வசனத்தை படியுங்கள் ... 

இரவையும் பகலையும் ஏற்படுத்தியவனும், சூரியனையும், சந்திரனையும் படைத்தவனும் அந்த அல்லாஹ்தான்! 
அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன. [அல்குர்ஆன் 21:33.]


இந்த வசனம் ஏதோ சொல்லுகிறது புரியுதா ?

மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் ......

இந்த வசனத்தில் சூரியனும் சந்திரனும் நீந்தி கொண்டு இருக்கிறது எனபது மிக தெளிவாக குரான் வசனம் கூறுகிறது ..

இன்றைய விஞ்ஞானத்தின் கூற்று படி இந்த வசனம் கூறுவது முற்றிலும் உண்மை எப்படி தெரியுமா ? 

இன்றைய நவீன விஞ்ஞானிகளின் கருத்துபடி சூரியன் மணிக்கு 17,280,000 km கிலோ மீட்டர் வேகத்தில் போய்கொண்டு இருப்பதாக சொல்கிறது 

இந்த பதினேழு லட்சத்தி இரனுற்றி எனபதுனாயிரம் கிலோமீட்டர் ஒரு நாளைக்கு மட்டும் செல்லுகிறது .

[அப்படிஎன்றால் ஒரு 100 வருடத்திற்கு எந்துணை மில்லியன் கிலோ மீட்டர் போயிருக்கும் 

இன்னும் இந்த வசனம் இறங்கி இன்றுவரை 1400 வருடம் ஆகிவிட்டதே அப்படிஎன்றால் 1400 வருடம் எத்துனை பில்லியன் கிலோ மீட்டர் சூரியன் போய் இருக்கும்

நினைக்கும்பொழுதே தலை சுற்றுகிறது]

அப்படி சூரியன் கற்பனை செய்யமுடியாத ராட்சச வேகத்தில் செல்லும் பொழுது மற்ற கோள்களையும் அதன் ஈர்ப்பு விசைகேற்ப தத்தனது பாதைகளில் இழுத்து செல்கிறதாம் ...

இதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட பாதைகள் உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் 

ஆனால் மிக பெரிய விஞ்ஞானி அல்லாஹ் 1400 வருடங்களுக்கு முன்பே இதை தெளிவாக சொல்லிவிட்டான் .


பலவகையான தோற்றங்களுடைய [பாதைகளுடைய] 
வானத்தின் மீது சத்தியமாக
அல் குரான் 51:7. 


இப்படி நீந்த்கொண்டு இருக்கும் சூரியன் மற்றும் பல மில்லியன் கணக்கான கோள்கள் துணைகோள்கள் இவை அனைத்தும் பல கோடி வருடங்களாக ஓடி கொண்டு இருகின்றன என்றும் 

இவைகள் தனது பாதையை விட்டு விலகுவதும் இல்லை மற்ற கோள்களை முந்துவதும் இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர் ....

ஆனால் படைத்த ரப்புல் ஆலமீன் பின்வரும் வசனத்தில் எப்படி கூறுகிறான் பாருங்கள் ....

இந்த வசனத்தை நீங்களே படித்து புரிந்து கொள்ளுங்கள்

அப்படி புரிந்து விட்டால் மனதார சொல்லுங்கள் அல்லாஹ் அக்பர்

[அல்லாஹ் மிக பெரியவன்] ..என்று 

சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.

அல் குர்ஆன் 36:40.

shams deen

 
back to top