Wednesday 24 June 2015

பெருவெடிப்பு கொள்கையும் குர்ஆன் கூறும் இரண்டு வசனங்களும்

1 comment:
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான்
முந்திய நூல்கள் கூறுகின்றன...

ஏன் இன்றும்கூட பலபேர் உலகம் எவ்வாறு உருவானது என்பதில் குழப்பமாகவும் சந்தேகமாகவும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக தெளிவாக குரான் மட்டுமே கூறுகிறது இதை தெளிவு படுத்த 2 வசனங்கள் போதும் ...

முதலில் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்
என்று பார்போம்.

பெருவெடிப்புதான் இந்த உலகம் உருவாக காரணம் என்று சொல்லகூடிய விஞ்ஞானிகளின் வார்த்தைகளை பாப்போம்

பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாட.

பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது.

ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு,

இந்த பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு பல முந்துக் கோட்பாடுகளும் உண்டு.

கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ சிலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து நெபுலாக்களும் விண்மீன் உருவாகத்துக்கான தூசிகளே. என்றார்

இக்காலத்தில் நெபுலா என்பது [[விண்மீன் பேரடை|விண்மீன் பேரடைகளியே குறிக்கும்)தூரமாக நகர்ந்து செல்கின்றன என்பதை "டோப்லர் பாதிப்பு" என்ற முறையின் மூலம் அறிந்தார்.

ஆனால் இவர் பால் வழியின் உள்ளே உள்ள நெபுலாக்களுக்கு மட்டுமே இதைக் கண்டறிந்தார்.

அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாண்டர் ஃபிரெய்டு மென் அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து ஃபிரெய்டு மென் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார்.

அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.

அதன்பின் கி. பி. 1924ஆம் ஆண்டில் எட்வர்டு ஹபிள் விண்மீன் பேரடைகள் அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன எனக் கூறினார்.

கி. பி. 1927ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் இயற்பியலாளரும் உரோமன் கத்தோலிக பாதிரியாரும் ஆன ஜியார்சசு லெமெட்ரே, ஃபிரெய்டு மென் சமன்பாட்டை தனியாகச் சமன்படுத்தி (முன் செய்தவர் ஜன்சுடீன் கோட்பாட்டில் இருந்து சமன் செய்தார்) விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள அகச்சிவப்பு விலகல்களை கண்டறிந்து அனைத்து விண்மீன் பேரடைகளுமே ஒன்றைவிட்டு ஒன்று விலகுகின்றன
என கண்டறிந்தார்.

விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள நகர்வுகளை ஆராயும் போது விலகல் குறிகள் ஒவ்வொரு விண்மீன் பேரடைகளுக்கும் மாறுபடும் என நினைத்தார்.

அதாவது பால் வழியில் இருந்து கணிக்கும் போது சில விண்மீன் பேரடைகள் பால் வழியை நெருங்கவும் சில விண்மீன் பேரடைகள் பால் வழியை விட்டு விலகவும் செய்யும் என எதிர்பார்த்தார்.

விண்மீன் பேரடைகளுக்கான நகர்வை கணிக்கும் போது அப்பேரடை பால் வழியை நெருங்கினால் வயலட்டு நிறமும் விலகினால் சிவப்பு நிறமும்
ஆய்வுக்கருவியில் வரும்.

ஆனால் இவர் எதிர்பார்ததற்கு மாறாக அனைத்து விண்மீன் பேரடைகளையும் கணிக்கும் போது எல்லாப் பேரடைகளுமே கருவியில்
சிவப்பு நிறத்தையே காட்டின.

[கவனிக்கவும்]

அதனால் கி. பி. 1931ஆம் ஆண்டில் ஜியார்சசு லெமெட்ரே இந்த அண்டமே வீங்குகிறது என்னும் வீக்கக் கோட்பாட்டை முன் வைத்தார்.

இதன் படி அண்டத்தில் ஒவ்வொரு பேரடையும் மற்ற பேரடையை விட்டு விலகுகிறது என்றால் அனைத்தும் ஒன்றாக இருந்த காலமும் இருந்திருக்கும்.

அந்த அனைத்துப் பொருட்களுமே ஒரு சிறு முட்டை போன்ற வடிவில் அடைந்திருக்கும்.

அதுவே ஆதி அண்ட முட்டை எனவும் அதுவே திடீரென வெடித்து பெருவெடிப்புக்கு காரணமானது என முடிவுக்கு வந்தார்.

பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 12 தொடக்கம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது.

இன்று நம்மால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது.

[மேலதிக விபரம் அறிய இணையத்தில் காணுங்கள்]

இது விஞ்ஞானிகளின் வாதம்
இதையே நறுகென்று பொட்டில் அதிதது போன்று சொல்ல கூடிய ஒரு வசனம் தான்

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும்இறை நிரகரிபளர்கள் பார்க்கவில்லையா?
(இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?

அல்குர்ஆன் 21:30

இங்கு கவனிக்க படவேண்டிய வார்த்தை

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும்,

இனி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் ..

இரண்டாவது வசனம் பின்னர் வானம் புகையாகைருந்தபோளுது என்று ஆரம்பிக்க கூடிய 41 வசனம் 11 அத்தியாத்தில் வரும் வசனம் ..

இவ்வளவு சக்திவாய்ந்த பேரண்டம் வெடித்து சிதறியதும் பல பில்லியன் வருடத்திற்கு வானத்தில் புகைமூட்டம் மட்டுமே இருந்ததாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்..

இவ்வளவையும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அல்குரான் கூறியிருப்பது அதிசயம் தானே .....
 — 

1 comment:

  1. அறிவியலும் ஆன்மீக நம்பிக்கைகளும் வேறு வேறானவை.

    நம்பிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆன்மீக கோபுரத்தை பிடுங்கி ஆய்வுகளின் அடிப்படையில் தொடர்ச்சியான மாறுதல்களுக்குட்பட்டு வரும் அறிவியல் எனும் படகின்மீது வைத்துப்பார்ப்பது விவேகமானதல்ல.

    அவ்வப்போது ஒன்று போலத்தோற்றமளிப்பது கூட தார்ச்சாலையும் ரயில் பாதையும் அவ்வப்போது அருகருகே வருவது போலத்தானே தவிர இரண்டும் ஒன்றாகாது.

    ReplyDelete

 
back to top