Monday 21 September 2015

20 நூற்றாண்டு விஞ்ஞானியும் அல் குர்ஆனும்

No comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுகு [இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக] 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒரு கண்டுபிடிப்பை உலக மக்கள் முன்பு சமர்பித்தார்.. அவை நாம் பார்க்க கூடிய மலைகள் அசைகின்றன என்றும் பல்லாயிரம்கோடி வருடங்களாக கணகிட்டால் மேகங்கள் ஓடுவது போன்று ஓடி கொண்டு இருக்கிறது என்றும் நம் நிகழ்காலத்திற்கு இது நமது கண்களுக்கு தெரியவில்லை என்றும் இன்னும் பல ஆயிரம் வருடங்கள் கழித்து நமது கண்ணுக்கு தெரியும் பிரமாண்ட மலைகள் நகர்த்து சென்று இருப்பது நமக்கு தெரியும் என்றும் விளக்கி இருந்தார். இன்னும் கண்டங்கள் தோன்றும் போது ஆரம்பத்தில் ஒன்றாகவே மலைகள் காணப்பட்டன ஆனால் பின்னர் அவை வேறுபட்ட திசைகளில் நகர்ந்ததால் ஒன்றிலிருந்து ஒன்றாக பிரிந்து சென்றன என்றும் இந்த உலகிற்கு எடுத்துரைத்தார்... ஆனால் எப்பொழுதும் போல இவரையும் மக்கள் உதாசின படுத்தினார்கள். பின்பு இவர் இறந்து போய் 50 வருடம் கழித்து அதாவது 1980களில் தான் அவரது கூற்று உண்மையென்று விஞ்ஞானிகள் புரிந்து கொண்டனர்... அதை சரிகட்டும் முயற்சியிலும் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஜெர்மனி அரசு ஒரு முடிவெடுத்தது .. அவை alfred wegnar die entstehung der kontintine unt ozeane அல்ப்ரெட் வேஞரின் சமுதரங்களின் எழுச்சி என்ற நூல் ஜெர்மன் மொழியில் அச்சிடப்பட்டது.. அவை உலக அறிஞர்கள் என்று சொல்லகூடிய முக்கியமான சிலருக்கும் அனுப்பட்டது. அதில் அவரின் குறிப்புகளை ஜெர்மன் அரசு வெளியிட்டு இருந்தது. அந்த நூல்களை மையமாக வைத்து 1980 களில் இருந்து மலையை பற்றிய ஆராய்ச்சி தீவிரபடுதபட்டது.. அந்த ஆராய்ச்சி முடிவில் ஒட்டுமொத விஞ்ஞானிகளும் ஒரு விஷயத்தை முன்வைத்தனர் .. அது என்ன தெரியுமா ? புவியோடு இடியோடும் ஏறத்தாழ 100 கி.மி தடிப்பு கொண்ட புவியோட்டின் மூடிபகுதி தகடுகள் சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை பெரிய 6 துண்டுகளாகவும் இன்னும் சிறிய பல ஆயிரம் துண்டுகளாகவும் பிரிய பட்டன. புவியின் தகட்டோட்டு கொள்கையின் படி இத்தகடுகள் புவியின் மேல் கண்டங்களை சுமந்தபடி அசைகின்றன என்றும் அவற்றிடையே பெரிய பெரிய சமுத்திரங்கள் பாய்கின்றன என்றும் கூறப்பட்டது மற்றும் கண்ட நகர்வானது வருடதிர்கு 1.5 செண்டிமீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நகர்வு தொடந்து நடைபெறுகிறது அதனால் ஒவ்வொரு வருடமும் புவியில் நிலவமைபில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது இதன் படி ஒவ்வொரு மலைகளும் நகர்ந்து கொண்டே உள்ளது மலைகள் நகர்வதால் தான் கடல்கள் நகர்கிறது அதன் கணக்கு படி அட்லாண்டிக் சமுத்திரமும் நகர்ந்து கொண்டே வருகிறது என்று ஆய்வை முடிகின்றனர் .... உங்களுக்கு புரிகிறமாதிரி சொல்வதாக இருந்தால் இப்பொழுது உங்கள் காலத்தில் உங்களுக்கு அருகே இருக்கும் மலைகள் ஒரு 40000 ஆண்டுகளுக்கு பின்னால் வேறு ஒரு பல்லாயிரம் மயிலுக்கு அப்பால் இருக்கும் [கணக்கீடு உதாரனதிர்க்காகவே] இன்னும் சொல்ல போனால் சமீபத்தில் நேபாளில் நடந்த பூகம்பத்தில் நேபாளமே 4 இன்ச் நகந்தாகாக சொல்லபடுவது இதன் அடிப்படையில் தான். அங்குலம் அங்குலமாக நகர்ந்தது பெரும் அதிர்ச்சியினால் ஒரே தட்டில் நகர்ந்து விட்டதையே இது குறிக்கும்... சரி இதை ஏன் இங்கு சொல்ல வேண்டும் . காரணம் என்ன தெரியுமா ??? ஏறத்தாழ 100 வருடத்திற்குள் இதை கண்டுபிடித்த அறிஞரை புறக்கணித்து பின்னால் உண்மையை விளங்கி அவரை ஆஹா ஓஹோவென்று பாராட்டி அவருக்கு சிலைகள் ஸ்டாம்பு வெளியிட்டு கவுரவித்தது முழு உலகமும்.. ஆனால் இதை இவருக்கு முன்பாகவே சுமார் 1400 வருடத்திற்கு முன்பே உலகின் மிகப்பெரிய விஞ்ஞானியான அல்லாஹ் குரானில் சொல்லிவிட்டான் [அல்லாஹ் அக்பர்] அல்லாஹ் மிகபெரியவன் . இதோ அந்த வசனம் இன்னும் நீர் மலைகளை பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர் ; அவை மேகங்களை போல் பறந்தோடும் ; ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல் திறனாலையே [அவ்வாறு நிகழும்] நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.... சூரா நம்ல் [27;88] Mohamed Shajahan [shams deen] www.theruh.blogspot.com youtube.com/hudashams0
 
back to top