Thursday 2 July 2015

அல் குர்ஆன் பற்றிய அறிந்திராத அற்புத தகவல்கள்.

No comments:
அல் குர்ஆன் அழகிய அற்புதம் ..

அதனால் தான் அல்லா இந்த வேதம் அகிலத்தாருக்கு நல்லுபதேசமேஅன்றி வேறு இல்லை என்கிறான் 

[பார்க்க68;52]

இந்த அற்புத வேதத்தை பற்றிய சில அரியதகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்....

பலபேர் அறிந்து இருந்தாலும் அறியாத சிலபேருக்ககவே இந்த பதிவு .

குரான் தொகுக்கப்பட்ட வரலாறு அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்

ஆனால் தொகுக்கபட்டதிர்க்கு பிறகு எப்படி மற்றமொழிகளுக்கு இந்த குரான் வந்தது என்பதை நாம் பார்க்க இருக்கிறோம்..

அரபு மொழியில் இருக்கும் குரானின் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக,

குரானை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மேலும் USMAN [RALIYALLAHU ANHU] அவர்களால் தொகுக்கப்பட்ட குரானானது

பழைய அரபு மொழியை கொண்டு எழுதப்பட்டது.

அதில் உயிர், மெய் குறியீடுகள் கிடையாது.

எனவே இதை மொழிபெயர்க்கும் போது அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு எனவும் கருதப்பட்டது.

அதனால் சிலர் குரானை மற்றமொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய கூடாது எனவும் வாதிட்டும்
இருந்து உள்ளனர் ,

இருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

சாபர் பின் அபுதாலிப் என்பவரால், மரியம் அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் அம்காரிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

இந்த அம்காரி மொழியை பற்றி சில குறிப்புகள் மட்டும் தருகிறேன்

அம்காரியம் என்பது அரபு மொழிக்கு அடுத்ததாக உலகில் அதிக மக்களால் பேசப்படும் செமித்திய மொழி.

எதியோப்பியாவின் ஆட்சி மொழிஇம்மொழியை மொத்தத்தில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் பேசுகின்றனர்.

இஸ்ரேலில் இன்றும் கூட இந்த மொழிகள் இருகின்றன

அதேபோன்று சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான அல்-பாத்திகா பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த இந்து அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குரானின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும்

ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர வரலாற்றில் இல்லை

[இவரை பற்றிய மேலதிக விபரங்கள் நான் தேடியவரையில் கிடைக்கவில்லை புகைபடத்தை தவிர இந்த விஷயத்தின் உண்மைத்தன்மையை பரிசோதித்து கொள்ளுங்கள்]

இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143ல் இலத்தீன் மொழிக்கு குரான் மொழிமாற்றம் செய்யப்பட்டது

இதன் அச்சுப்பதிப்பு 1543ல் வெளிவந்தது.

தொடர்ந்து இடாய்ச்சு, பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கும் குரான் மொழிபெயற்கப்பட்டது.

முதல் ஆங்கில குரான் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார்.

தமிழில் முதல் குரான் மொழிபெயர்ப்பு 1943ல் வெளிவந்தது. அப்துல் கஃகீம் பாகவி என்பவரால் இது எழுதப்பட்டது.

தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் 1983ல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது.

இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் குரான் தமிழாக்கங்கள் வெளியிடப்படுகின்றன...

இவ்வளவு விஷயங்களை தாண்டி இப்பொழுது நம் கையில் குர்ஆன் மொழிபெயர்ப்பு உள்ளது ..

ஆனால் நம்மில் படிப்பவர்கள் தான் மிக குறைவு

முதல் படம் ;

ஒட்டகத்தின் எலும்பில் எழுதப்பட்ட
திருகுர்ஆனின் வசனம்

இரண்டாவது படம்;
1647ல் அச்சிடப்பட்ட இலத்தீன் குரான் மொழிபெயர்ப்பு

மூன்றாவது படம்;

சமர்கன்ட் கையெழுத்துப் பிரதி உஸ்மான் ரலியள்ளகு அன்ஹு காலத்தில் எழுதிய பாதுகக்கபட்ட கையெழுத்துப்பிரதி .

ஆதாரங்கள், மற்றும் குரான் பற்றிய முக்கிய இணையங்கள் உபயோகபடுத்தி கொள்ளுங்கள் ...
http://corpus.quran.com/

http://www.emuslim.com/Quran/Translation_English.asp

http://al-quran.info/#menu

http://www.yabiladi.com/coran/

shams deen

No comments:

Post a Comment

 
back to top