Thursday 28 January 2016

கற்பழிப்பின் வரலாறுகள் ..

No comments:
கற்பழிப்பின் வரலாறுகள் ..
கொஞ்சம் மூச்சை உள்வாங்கி கொண்டு படியுங்கள்
காரணம் நீங்கள் படிக்க இருக்கும் இந்த செய்தி ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிர் ,,,
1890 களில் சீனாவில் பாக்சர் புரட்சியின் போது மேற்கத்திய நாட்டு படைகள் சீன பெண்களை கற்பழித்தனர் ..

முதலாம் உலக போரில் ஜெர்மானிய வீரர்கள் பெல்ஜியம் நாட்டில் கற்பழிப்பை கட்டாய கடமையாக்கி வைத்து இருந்தனர் .

இரண்டாம் உலக போரில் 2 லட்சம் கொரிய சீனா தைவான் பிலிப்பைன் பெண்கள் ஜப்பான் இராணுவ முகாமில்
வைத்து கற்பழிக்க பட்டனர்..

உலகத்தின் மாபெரும் கற்பழிப்பு என்று சொல்வது 1944 இல் இரண்டாம் உலக போரின் போது சோவியத் படை ஜெர்மன் பெண்கள் மீது நடத்திய கற்பழிப்பு தான் ,
8 வயதில் இருந்து 80 வயதிலான பெண்கள்
சுமார் 20 லட்சம் பெண்கள்
தொடர்ந்து 70 முறை கற்பழிக்க பட்டார்கள்

இதில் இரண்டு லட்சம் பெண்கள் இறந்து போயுள்ளார்கள் ..
பெர்லினில் 1 லட்சம் பெண்கள்
கருகலைப்பு செய்துள்ளனர்

1971 பங்களாதேஷ் சுதந்திர போர் ,1975 லைபீரியா உள்நாட்டு போர் ,1980 இலங்கையில் இந்திய அமைதி நடவடிக்கை, 1992 போஸ்னிய போர் ,1994 ருவாண்டா இன அழிப்பு ,
1996 கொசாவா யுத்தம் ..

இத்தனை போரிலும் பெண்கள் கற்பளிக்கபடாமல் இல்லை
எத்துனை பெண்கள் என்று கணக்கு பண்ணினால்
நிச்சயம் முடியாது
காரணம் கணக்கில் அடங்கா கற்பழிப்புகள் இவைகள்

அமெரிக்காவில் மட்டும் 2 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பளிக்கபடுகிறாள்
அமெரிக்காவில் 54% கற்பழிப்புகள் போலீசில் சொல்லபடுவதில்லை
8 ம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவில் படையெடுத்த ச்காண்டிநோவியர்கள் பிரிட்டன் அயர்லாந்து பெண்களை கணக்கு வழக்கு இல்லாமல் 
கற்பழித்ததாக வரலாறு உண்டு ,,,


இன்னும் எத்துனையோ டெல்லி மாணவிகள் 
எத்துனையோ பெயர் வராத சகோதரிகள் ...

இதெற்கெல்லாம் ஒரே தீர்வு இஸ்லாம் மட்டுமே ..
கற்பழித்தவனுக்கு மரணதண்டனை கொடுப்பதால் கற்பு திரும்பவா வந்து விட போகிறது என்று பேசி பேசியே இவ்வளவு கற்பழிப்புகளுக்கு உடந்தையாக ஆகிவிட்டார்கள் சிலர்
இதற்கெல்லாம் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நமது பெண்களும் கொஞ்சம் கட்டுகோப்பாக இருக்க வேண்டும் ...
பின்வரும் குர்ஆன் வசனங்களை பாருங்கள்
பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள்
மேற்கொள்ளத் தடை ...
அந்நிய ஆண்களும் பெண்களும் இருபாலரும் இணைந்து சரளமாகப் பழகுவதற்குத் தடை - திருக்குர்ஆன் 24:27, 33: 55
அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை-
திருக்குர்ஆன் 33:32.
வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய காலத்தில் விரைவாகத் திருமணம் -
திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்
மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை
திருக்குர்ஆன் 17:31
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை (மஹர்) கொடுக்க கட்டளை திருக்குர்ஆன் 4:4, 17:31
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
அல்குர்ஆன் 17:32
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.
அல்குர்ஆன் 24:31
ஆடவர்களை திரும்பிப்பார்க்க வைக்கிற நடையே ஆபத்து என்றால்,அடுத்தவர்களை சுண்டி இழுக்கிற ஆடைகளை
என்ன சொல்வது?
இவ்வளவு அறிவுறைகளையும் சரியாக பின்பற்றவேண்டும் மீறியும் ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்தால் அவனுக்கு மரண தண்டனை தான் தரவேண்டும் என்கிறது இஸ்லாம் .
அதுவும் மற்றவர்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறுகிறது
அப்பொழுதான் அடுத்த வீட்டு பெண்ணை
தொடுவதற்கு யோசிப்பான் ..
அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
அல்குர்ஆன் 24:2

இதெல்லாம் சாத்தியமா என்று பேசுபவர்கள் இதை விட நல்ல யோசனையை கூறி உலகில் உள்ள கற்பழிப்புகளை குறைக்க வழி சொல்லலாம் ...
ஆடை அறிவுரையை பெண்களும்
கடுமையான தண்டனை அறிவுரையை
உலகின் உள்ள நாடுகளும்
பின்பற்றி இருந்தால் மேலே குறிபிட்டுள்ள
அத்துணை சகோதரிகளின்
கற்பு பாதுகாக்க பட்டு இருக்கும் ,,
 
back to top