Saturday 6 February 2016

ஆஸ்கார் விருது vs கிங் பைசல் அவார்ட்

No comments:
உலகத்திலையே மிக பெரிய விருது மற்றும்

அதிகம் பரிசு பொருள் வந்து குவியும்

அவார்ட் ஆஸ்கார் தான் ...

ஆனால் இந்த ஆஸ்காரையும் மிஞ்சும் அளவிற்கு
பரிசு கொடுக்கும் ஒரு அவார்ட் ..

கிங் பைசல் அவார்ட்

இதுவும் இண்டர்நேஷனல் அவார்ட் தான் ..

ஆஸ்கார் அவார்டின் இந்திய மதிப்பு ஏறக்குறைய 135 கோடி ..

ஆனால் இந்த கிங் பைசல் அவார்டின் மதிப்பு ஏறக்குறைய 144 கோடி..

ஆஸ்கார் சினிமா துறையினருக்கு மட்டுமே தரப்படும்

இந்த கிங் பைசல் அவார்ட்
5 விஷயங்களாக பிரிக்கப்பட்டு அதற்க்கு தரப்படுகிறது..

சர்விஸ் டு இஸ்லாம் என்று இஸ்லாமிய அறிஞர்களுக்கும்..

 மருத்துவம், மற்றும் கணிதவியல் விங்கானவியல் பொது சேவை, செய்யும் உலகளாவிய மக்களை தேர்தெடுத்து அவர்களுக்கு கொடுக்கபடுகிறது ....

இந்த அவார்டை கொடுக்கும் நாடு சவூதி அரேபியா தான் ,

கிங் பைசல் அவார்ட் போன வருடம் கூட இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு கொடுக்கப்பட்டது

அதனால் இது முஸ்லிம்களுக்கு மட்டும் என்று நினைத்து விட வேண்டாம் ..

அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்காக மொத்தம் 46 அறிஞர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர சேவைக்காக கொடுத்துள்ளார்கள்
இவர்கள் அனைவருமே ஒரு சிலரை தவிர கிருஸ்துவர்கள் ..

இந்த கிங் பைசல் அவார்ட்

ஜெர்மனியை சேர்ந்தவர்கள் இதுவரை 10 பேர் வாங்கியுள்ளனர்

லண்டனை சேர்நதவர்கள் 23 பேர்

பொதுவாகவே இஸ்லாமியர்களுக்கும்

யூதர்களுக்கும் ஆகாது இருந்தும்

பொது சேவைக்காக இரண்டு யூதர்களுக்கும் சவூதி அரசு இந்த அவார்டை வழங்கி இருக்கிறது

சிட்னி பெர்னெர் மற்றும் ரொனால்ட் ரெவி இருவருமே யூதர்கள் தான்

இந்தியாவை சேர்ந்த செய்யது அபுல் ஹசன் அல் நத்வி மற்றும் ஜாகிர் நாயக் மற்றும் அஹ்மத் தீதாத் . மற்றும் பேராசிரியர் முஹம்மது நஜதுல்லாஹ் சித்தீகி

இன்னொரு இந்தியரும் இருக்கிறார் அவரை பற்றி
பதிவின் இறுதியில் குறிப்பிடுகிறேன் ...........

1983 வருடம் Wallace பீட்டர்ஸ் என்பவருக்கு இந்த அவார்டை வழங்கி கவுரவித்தது சவூதி அரசு .

இவர் லண்டனை சேர்ந்த பேராசிரியர் இவர் தான் மலேரியா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் பெரும் பங்கு வகித்தவர் ...
 
1984 டிசீசெஸ் மைகேல் பில்த் என்பவருக்கு டயாபடீஸ் சிகிச்சை முறைக்கு இவர் பங்கு பெரிதும் பேசபடுவதாள் இவருக்கு கிங் பைசல் அவார்ட் வழங்கப்பட்டது..

2006 இல் ஷேசாச்சளு நரசிம்மன் என்ற பெங்களூரை சார்ந்த mathematicians உலகத்தின் சிறந்த மேதமாடிசியர்களில்
இவரும் ஒருவர்

இந்தியரான இவருக்கும் இந்த இந்த உயரிய விருதை வழங்கி கவுரவித்தது சவூதி அரேபியா ......

இவர் சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர் ,,

இப்பொழுது சொல்லுங்கள் யார் மதவாதிகள் யார் சகிப்புத்தன்மை அற்றவர்கள் முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தான் அதிகமாக இந்த விருதுகள் கொடுகபட்டுள்ளது ...

இதில் கொடுமையன்னான யாரோ ஒருவரின் தாடி வைத்த புகைபடத்தை போட்டு சவூதியை சேர்ந்த மார்க்க அறிஞரின் பத்வா

சவூதியில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும்
முஸ்லிம்களாக மாறி விட வேண்டும் இல்லையேல் அவர்கள் கொல்ல பட வேண்டும் என்று பத்வா கொடுத்தாராம் ..

அப்படியெல்லாம் பரப்புகிறார்கள்

 [பத்வா என்பதே இவர்களுக்கு என்னவென்று புரியவில்லை பத்வா பிறமக்களுக்கு பிறப்பிக்க முடியாது முஸ்லிம்களுக்கு மட்டுமே பிறப்பிக்க முடியும்]

இங்கே வருடா வருடம் அணைத்து சமுதாய சேவை மனப்பான்மை உள்ள மக்களை கவுரவித்து தங்கள் நாட்டின் விருந்தினராக அவர்களுக்கு மரியாதை செய்து தங்கள் நாட்டின் உயரிய விருதான கிங் பைசல் அவார்ட் டையும் கொடுத்து [மேலே சொன்ன பெரும் தொகையை]

கொடுத்து கவுரவிக்கின்ற்றது ..

இதில் முஸ்லிம்களின் எதிரிகள் என்று சொல்ல கூடிய யூதர்களும் அடங்குவார்கள்

எங்கேயும் எந்த பத்வாவும் வெளியிடவில்லை யாரும் இதற்க்கு எதிராக கிளம்பவும் இல்லை ..

சினிமாவுக்கும் கூத்திற்கும் அவுத்து போட்டு ஆடுவதற்கும் அவார்ட் என்ற பெயரில் குடுத்து குடியும் கும்மாளமும் அரங்கேறும் ஆஸ்கார் சிறந்ததா ???

[சமீபத்தில் வில்ஸ்மித் ஆஸ்காரை தீண்டாமை அடிப்படையில் கருப்பர்கள் ஒதுக்கபடுகிரார்கள் என்று புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது]

மக்களுக்கு சேவை செய்ததற்காக தங்கள் மக்கள் இல்லை என்று தெரிந்தும் அவர்களை வழிய கூப்பிட்டு அவர்களை உபசரித்து அவர்கள் ஹிந்துவோ முஸ்லிமோ யூதரோ கிருஸ்துவரோ யாரோ மக்களுக்கு தேவையான விஷயத்தை செய்பவர்களை

 கவுரவித்து இதுவரை எந்த பெரும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கொடுத்து வரும் கிங் பைசல் அவார்ட் சிறந்ததா ???

உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் ..

பதிவை படித்து விட்டு பிற மக்களுக்கும்
பகிர்ந்து தெரிவியுங்கள் ..

Mohamed Shajahan [shams deen]

https://en.wikipedia.org/wiki/M._S._Narasimhan

https://en.wikipedia.org/wiki/King_Faisal_International_Prize

https://en.wikipedia.org/wiki/David_Morley_(paediatrician)
 
back to top