Tuesday 29 March 2016

விற்பனை தீவிரவாதிகள்.

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..

வியாபார யுக்தி ...

கடந்த காலம் தொடக்கம் இன்று வரை இவர்கள் காட்டக்கூடிய விளம்பரங்களை நம்பி நாம் கோதுமை, வீட்டில் தயாரிக்கும் சத்துமாவு, குருணை கல் நீக்கிய எழும்பை பலப்படுத்தும் அரிசி கஞ்சி
பார்லி கஞ்சி [ஜவ்வரிசி கஞ்சி]
போன்றவைகளை தவிர்த்து விட்டோம்.

விளம்பரங்களில் நடிக்கும் நபர்கள் ஏன் நடிகர்களாகவோ அல்லது விளையாட்டு வீரர்களாகவோ இருக்கிறார்கள் என்று நாம் என்றாவது யோசித்தது உண்டா?

அதே போன்று இவர்கள் காட்டும் விளம்பரங்களில் இயல்பான மனிதர்கள் இல்லாமல் வெள்ளை நிற பெண்கள் ஏன் என்று நாம் யோசித்தது உண்டா ?
டாலர் ஸ்டாங்கர் ஸார்பர் என்று எத்தனை வருடங்களாக ஏமாற்று வித்தை காட்டி மிரட்டி தங்களது பொருட்களை விக்கிறார்கள்.

ஹார்லிக்ஸ் குடிக்காத பிள்ளை வளராது என்ற கருத்தை அன்றாடம் சம்பாதித்து குடும்பத்தை நடத்தும் நம் தாய் தகப்பனின் மனதில் ஆழமாக வேரூன்றி விளம்பரங்கள் மூலம் இயக்கினார்கள்.
விளைவு வாயை கட்டி வயிற்றை கட்டி சேத்து வைத்து ஹார்லிக்ஸ்
பாட்டில் வாங்க பட்டது.
இதனால் நமக்கும் ஒரு பெருமை
ஹார்லிக்ஸ் குடிப்பவன் மட்டுமே அறிவாளி மற்ற என் நண்பர்கள் எல்லாம் என்னை விட அறிவில் குறைந்தவர்கள் என்று பிஞ்சு மனதில் நெஞ்சை விதித்தார்கள்....
விளைவு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் தொடராக ஆகியது.

தாத்தா காலத்தில் ஆரம்பித்து இன்று பேரனுக்கு பேரன் காலம் வரை டாலர் ஸ்டாங்ர் ஸார்ப்ர் என்று ஏதோ ஒரு வெள்ளை பொடியன் அடிக்கடி
 வந்து கொண்டு தான் இருக்கிறான்....
எத்தனை பேர் இதனால் ஸ்டாங் ஆனார்கள் எத்தனை பேர்
இதனால் ஷார்ப் ஆனார்கள் ??

ஜீ டி நாயுடு அப்துல் கலாம் போன்ற அறிவாளிகள் இதை குடிக்கவில்லையே அப்படியானால் அவர்கள் அறிவாளிகள் இல்லையா ?
விற்பனை தீவிரவாதிகள்..

தம் குடும்ப பரம்பரை வாழ எத்தனை ஏழை எளிய மக்களின் வயிற்றில் வேண்டுமானால் அடிக்கலாம் என்று நினைக்கும்
இந்த கும்பல்கள் தான் கையில் துப்பாக்கி வைத்து மிரட்டும் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்...

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளிள் முக்கியமான ஒன்று இஸ்லாமிய வியாபாரம்
அளவு நிருவையில் மோசடி செய்பவனை பற்றி மிக கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்..

ஒரு முறை முஹம்மது நபி கடைத்தெருவில் போய் கொண்டு இருந்த நேரத்தில் கோதுமை வியாபாரியை சந்திக்கிறார்
கோதுமை மூட்டையில் கையை நுழைத்து மூட்டையில் உள்ள அடி கோதுமையை எடுத்து காட்டி அந்த வியாபாரியிடம் சொன்னார்கள் ஏன் மூட்டையில் உள்ள அடி கோதுமை தண்ணீராக உள்ளது என்று கேட்கிறார்கள்
அதற்கு அந்த வியாபாரி மழை பெய்த காரணமாக கோதுமை தண்ணீராக இருக்கிறது என்று கூறுகிறார்
அதற்கு முஹம்மது நபி விளக்கம் சொல்கிறார்கள்
மழை பெய்தால் முழு கோதுமையும் ஈரப்பதத்துடன் தானே இருக்க வேண்டும்
அல்லது அடியில் உள்ள கோதுமையை மேலே எடுத்து போட்டு மக்களிடம் சொல்லி வியாபாரம் செய்யுங்கள்
அல்லாஹ் வியாபாரத்தில் ஏமாற்றுவதை கண்டிக்கவில்லையா
என்று கேட்கிறார்கள் முஹம்மது நபி...

இந்த ஹார்லிக்ஸ்கள் பூஸ்ட்கள் எத்தனை காலமாக இவர்கள் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்
எனது வெற்றிக்கு காரணம் பூஸ்ட் என்று விளம்பரங்களில் தான் பார்க்க முடிகிறதே தவிர யாராவது அப்படி சொல்வதாக தெரியவில்லையே ...
எத்தனை வருடங்களாக ஏமாற்றுகிறார்கள் .........
இன்னும் எத்தனை வருடங்கள் ஏமாற்றுவார்களோ.
வேதமுடையவரே ஏன் உண்மையை பொய்யுடன் கலக்குகிறீர்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைகிறீர்கள்
குர்ஆன்: 3' 85

இந்த வசனத்தின் படி வியாபாரத்தில் ஒரு பொருளை அது உரிய தரத்துடன் இல்லையெனில்
அதை பற்றி உயர்வாக கூறி அதனை
விற்பனை செய்ய கூடாது..




No comments:

Post a Comment

 
back to top