Sunday 20 March 2016

அபுல் கலாம் ஆசாத் ,,,,

அறிந்த பெயர் அறியாத விஷயங்கள் ..

அபுல் கலாம் ஆசாத் என்றதும் இந்தியாவின் ஒரு தலைவர் என்றது மட்டுமே நாம் பரவலாக அறிந்து இருக்கிறோம் ..

ஆனால் இவர் பிறந்தது மக்காவில் ஆம் 1888 இல் மக்காவில் தான் பிறந்தார் இவரது தகப்பனார் முஹம்மது அல் கைருதீன் ஒரு கவிஞர் மற்றும் இமாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்றைய காலத்திலையே எழுதியவர்

அரபு பெண்ணை மணந்ததால் அபுல் கலாம் ஆசாத் மெக்காவில் பிரப்பதாகி விட்டது

இந்தியாவுடைய முதல் கல்வி அமைச்சர் இவர் தான்

இந்தியாவின் பாரத ரத்னா விருது தேர்வு குழுவில்
உறுப்பினரும் இவர் தான்

இவரை பாரத ரத்னா விருதுக்கு அந்த குழு பரிதுரை செய்த பொழுது விருதை வாங்க மறுத்துவிட்டார்

நானே குழுவில் உறுப்பினர் எனக்கே விருது கொடுப்பது சரியல்ல என்று விருதை தவிர்த்துவிட்டார்..

இதனால் 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது

இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரை தான் வைத்துள்ளார்கள் ..

இவரின் உண்மையான பெயர் அபுல் கலாம் முஹையதீன் அஹ்மத்

ஆசாத் என்ற உருது வார்த்தைக்கு விடுதலை என்று பெயர் இந்தியாவிற்கு விடுதலை வேண்டும்

என்ற நோக்கில் தனது பெயருடன் அபுல் கலாம் ஆசாத் என்று இணைத்து கொண்டார்

ஆம் இவர் தவிர்க்க முடியாத சுதந்திர போராட்ட தியாகி

தன்னுடைய எழுத்தால் சுதந்திர
வேட்கையை உணர்த்தியவர்
இவர் எழுதிய

India Wins Freedom என்ற நூல் இன்றுவரை பேசபடுகிறது..

ghubar i khatir என்று உருது மொழியிலும் இந்தியாவின் சுதந்திரம் பற்றி எழுதி பெருவாரியான படித்த மக்களிடம் இந்திய சுதந்திர வேட்கையை உருவாக்கியர

மற்றும்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு சுதந்திர விடுதலைக்காக பாடுபட்டதால்

ravla act என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்து இவரது நூட்களை மீண்டும் பப்ளிஷ் செய்ய விடாமல் தடுத்தது பிரிட்டிஷ் அரசு

இவ்வளவு சிரமங்களும் இவ்வளவு இன்னல்களும் தாண்டி சுதந்திரம் வாங்கி கொடுத்த முஸ்லிம் தியாயிகளை மறந்து விட்டு

,,முஸ்லிம்களாகிய நாங்கள் தீவிரவாதிகள்
அல்ல என்று கோஷம் போட வைத்து விட்டனர் ...

திப்பு சுல்தான் என்றாலே அவன் தேச விரோதி
என்று கான்பிகின்ற்றனர்..

திப்பு சுல்தான் தேச விரோதி என்றால்
அபுல் கலாம் ஆசாத்தும் தேச விரோதி தான்..

அபுல் கலாம் தேச விரோதி என்றால்
அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து

அவருக்கு ஸ்டாம்பு வெளியிட்டுள்ள இந்திய அரசும்

தேச விரோதிகள் தான் ...


No comments:

Post a Comment

 
back to top