Sunday 5 June 2016

history of sheikh mahbal அறியப்பட்டாத அறிஞர்

அறியப்படாத அறிஞர்

இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக

இஸ்லாமிய அறிஞர்கள் எத்தனையோ பேர் தங்களுடைய  அறிவை புத்தகமாக தொகுத்து தந்துள்ளனர்.

அவற்றுள் முக்கால்வாசி சிலுவை யுத்தமான அந்தலூசில் (ஸ்பெயின்) அழிக்கப்பட்டது..

இன்று சில புத்தகங்கள் மட்டுமே கிடைக்கிறது முழுவதும் கையெழுத்து பிரதிகள்.....

அந்த கால் வாசி புத்தகங்களை படிக்கும் போது தான் தெரிகிறது ஐரோப்பியர்கள் சொல்ல கூடிய டார்க் ஏஜ் பொய்யானது அந்த நூற்றாண்டில் தான் எத்தனையோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க பட்டது என்று....

இப்னு கல்தூம் இப்னு ஷீனா அல் ஜஷீரா அபூபக்கர் அர் ராஜி நூருத்தீன் அப்பாஸ் இப்னு பிர்னாஸ்
இப்படி எத்தனையோ அறிஞர்களின் மேற்கத்தையர்களால் மறைக்க படுகிறது....

இதை மீட்டவே இந்த கட்டுரை இன்று நாம் பார்க்க இருக்கும் அறிஞர் உலக வாழ்க்கையில் ஏதும் புதிதாக கண்டுபிடிக்கவில்லை என்றாலும் முஸ்லீம்களுக்கு இவருடைய வரலாற்றில் படிப்பினை உண்டு...

அதை தான் இன்று படிக்க இருக்கிறோம்

படிப்பதற்கு முன்பு தமிழில் இந்த அறிஞரை பற்றி எழுதும் முதல் கட்டுரை இது தான்

இதுவரை யாருமே படித்திருக்கவில்லை
நீங்கள் தான் முதன் முதலாக தமிழில் படிக்கிறீர்கள்

இவருடைய பெயர்
ஷேக் முஹ்பில் இப்னு ஹாதிஈ அல் வாதிஈ....

ஏமன் நாட்டை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஜைதீயா கொள்கையுடயவர் அதாவது ஷிஆ வின் ஒரு குழுமத்தில் உள்ளவர்..

ஏமனில் ஸ அதா எனுமிடத்தில் இந்த வழிகெட்ட ஷிஆக்கள் பரவலாக உள்ளனர்

இங்கே பிறந்தவர் என்பதால் இவரும் ஷிஆவாகதான் இருந்தார்

படிப்பு என்று ஏதும் படித்திருக்கவில்லை

தமது 20 வயதில் குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி சவூதிக்கு வந்தார் சவூதி அரேபியா வந்தவர் ஒரு  பெரிய கட்டுமான பில்டிங்கில் செக்யூரிட்டியாக வேலை செய்ய ஆரம்பித்தார் ...

வேலை முடிந்த நேரத்தில் அருகேயுள்ள நூலகத்தின் வாயிலாக

புலூகுல் மராஅம் மற்றும் பத்துஹுல் மஜீத் போன்ற புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்..

பத்துஹுல் மஜீத் என்ற புத்தகம் இஸ்லாமிய சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட நூல் இதைத்தான் படிக்கிறார்..

பிறகு இரண்டு வருடம் கழித்து தமது சொந்த ஊருக்கு செல்கிறார் அங்கே நடக்கும் கபுர் வணக்கம் தட்டு தாயத்து போன்ற அனாச்சாரங்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்

இஸ்லாத்தில் இதெல்லாம் இல்லை என்ற ரீதியில் பிரசாரம் செய்கிறார்

ஷிஆக்களின் எதிர்ப்பு அதிகமாகவே மீண்டும் சவூதிக்கு வந்துவிடுகிறார்

இந்த முறையும் வேலை தேடி அலைந்து திரிகிறார்...

மரம் வெட்டுவது தோட்டதிற்கு தண்ணீர் ஊற்றுவது என்ற சின்ன சின்ன வேலைகளை செய்கிறார்

அன்றைய தினம் வேலை கிடைத்தால் சரி இல்லையென்றால் ஏதாவது ஒரு பள்ளியில் உக்காந்து படிப்பது இப்படியே தமது வாழ்க்கையை அமைத்து கொள்கிறார்...

இப்படியே வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது

அது தான் மதினா யுனிவர்சிட்டி விடுத்த வாய்ப்பு யார் வேண்டுமானாலும் கல்வி கற்க வரலாம் என்ற அறிவிப்பு தான் அது

உடனே அஙகு சேர்த்து படிக்கிறார்

தமது படிப்பை முடித்து தமது சொந்த ஊரான ஏமனில் சஅதா எனுமிடத்திற்கு போய் மறுபடியும் அதே பிரச்சாரத்தில் ஈடுபட்டுகிறார்...

அதே பிரச்சினை அதே மாதிரி எதிர்ப்பு ஆனால் இந்த முறை முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார்..

அதன் விளைவாக தம்மாஜ் எனும் பெயரில் ஒரு நகரம் உருவானது

ஷிஆக்களின் கோட்டையில் அவர்களது வழிகேடிட்டில் இருக்கிறார்கள் என்பதை பிரச்சாரம் செய்ய கூடிய ஊராக தம்மாஜ் மாறியது....

இந்தியா முதற்கொண்டு எந்த நாட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நான் பயிற்றுவிக்கிறேன் என்று ஷேஹ் முஹ்பில் அறிவிப்பு கொடுத்தார்

இப்படி பல நாடுகளில் இருந்து கல்விக்காக போனவர்கள் இன்றைய தம்மாஜ் நகரத்தார்..

ஷிஆக்களுக்கு கை மீறி போனது
இவர்களை ஒன்றுமே செய்யமுடியாமல் போனது ஆனாலும் அவர்கள் மீதுள்ள கோபம் மட்டும் குறையவில்லை..

பல ஆயிரம்  அறிஞர்கள் இந்த இடத்தில் உருவாகினார்கள்

இந்த நிலையில் தான் கடந்த 2001 இல் ஷேஹ் முஹ்பில் அவர்கள் மரணமடைந்தார்.

இவருக்கு பிறகு யஹ்யா பில் அஹ்யல் அஹ்ஜூரி எனும் அறிஞர் அந்த நகரத்தை பொருப்பில் எடுத்தார்

ஏமன் புரட்சியின் போது ஹூதியூண்கள் என்ற ஷுஆக்கள் இலக்கு வைத்தது இந்த நகரத்தை தான்.

பிறகு தான் ஆயிரக்கணக்கான அறிஞர்கள் அநத நகரத்தை விட்டு நாங்கள் வெளியேருகிறோம் என்று வெளியேறி இன்றைக்கு உலகம் முழுவதும் தவ்ஹீத் பிரசாரம் செய்து கொண்டு உள்ளனர்.

இதற்கு வித்து ஒரு செக்யூரிட்டியாக தமது வாழ்க்கையை ஆரம்பித்த ஷேஹ் முஹ்பில் தான்...

சவூதி அரேபியாவின் தலைமை காதி அதாவது சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த ஷேஹ் பிம்பாஸ் அவர்கள் தெளிவாக சொன்னார்கள் என்னை விட ஹதீஸ் கலையில் வல்லுநர் ஷேஹ் முஹ்பில் அவர்கள் என்றார்கள்...

இத்தனைக்கும் பிம்பாஸ் அவர்களின் மாணவர் தான் இந்த ஷேக் முஹ்பில் அவர்கள்.....

படிப்புக்கு வயது வித்தியாசம் தேவையில்லை...

படிப்புக்கு நாம் செய்யும் தொழில் சம்பந்தமில்லை

நேர்மையான உழைப்பிற்கு நிச்சயம் கூலி உண்டு என்பதற்கு ஷேஹ் மஹ்பில் அவர்கள் ஓர் உதாரணம்...

ஷேஹ் முஷாஹித் இப்னு ரஸீன் அவர்களது பயானில் கூறப்பட்டுள்ள இந்த விஷயத்தை அடிப்படையில் தேடிய வரலாறு இது...

#shams

No comments:

Post a Comment

 
back to top