Sunday 24 April 2016

புத்தரும் முஹம்மது நபியும் ஓர் ஆய்வு.

அல்லாஹ்வின் பெயரை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்..

புத்தரும் முஹம்மது நபியும் என்ற இந்த கட்டுரை ஒரு ஆய்வு கட்டுரை தான்

இது முழுக்க முழுக்க என்னுடைய அனுமானம் தானே தவிர

எப்படி இது என்று யாரும் கேட்க கூடாது...

எனக்கு தெரிந்த ஆதாரத்துடன் படித்ததை ஆய்வு செய்து உங்கள் முன் வைக்கிறேன்

இப்படி பீடிகை போட காரணம்

அது எப்படி முஹம்மது நபியை இன்னொரு மத கடவுளான புத்தருடன் ஒப்பிடுகிறீர்கள் என்று யாரும் கேட்க கூடாது என்பதால் தான்..

மற்றும் புத்தர் கடவுளே கிடையாது எனும் போது ஏன் அவர் நபியாக இருக்க கூடாது என்ற சந்தேகம் வருகிறது..

[இயேசு கிறிஸ்து அலைஹிவஸல்லம் போன்று]

புத்தர் அவர் தன்னை கடவுளாக எங்குமே சொல்லவில்லை

அன்பே ஆராதனை என்ற ரீதியில் மக்களிடம் அன்பு காட்டுங்கள் என்று சொன்னார் ...

தெளிவாக சொல்லவேண்டுமென்றால் புத்தர் ஒரு நாத்திக கொள்கையில் உள்ளவர்

ஒரே ஒரு வித்யாசம் கடவுளே இல்லை என்று சொல்லவில்லை ,.,,,

கடவுள் இருக்கிறார் ஆனால் நீங்கள் நினைக்கும் கடவுள் இல்லை என்று தான் சொன்னார்

(மீண்டும் சொல்லுகிறேன் ..இதற்கான ஆதாரம் கீழே உள்ளது)

இவரின் கரிசனமான பேச்சு அமைதியான சிந்தனை இவரை கடவுள் அந்தஸ்திற்கு நிறுத்தியது ..

நம்மில் பெரும்பாலானவருக்கு தெரியாத விஷயம் புத்த மதத்தில் புத்தர் மட்டுமே கடவுள் கிடையாது 30 க்கும்

 மேற்பட்டவர்கள் புத்தமத்தில் கடவுளாக முன்னிருதபடுகிறார்கள்..

புத்த மதத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு நேபாளத்தில் செய்யப்படும் வணக்கங்கள் திபத்தில் இருக்காது திபத்தில் செய்யப்படும் வழிபாடுகள் சீனாவில் இருக்காது

 கிட்டத்தட்ட 17 க்கும் மேற்பட்ட பிரிவுகள் உண்டு ...

அதே போன்று மீளே, பூசா ,மோராஹு, பொசாட்சு,ஆர்யாமேத்ராயா ,மிரு பொசால், இன்னும் பல பிரிவுகள்
கடவுள்கள் உண்டு ...

இதில் சில பிரிவை தவிர மற்றவர்கள் அனைவரும் கவுதம புத்தரை கடவுளாக ஏற்று கொள்ளாதவர்கள் தான் ..

அப்போ சீனா திபத் பகுதியில் இருக்கும் சிலைகள் எல்லாம் புத்தர் இல்லையா ??

உண்மையில் அவர்கள் புத்தர்கள் இல்லை

இப்போ இந்த புகைபடத்தில் முதலாவதாக உள்ளவரை பார்த்தீர்களாயின் புத்தர் போன்று தோன்றும் உண்மையில் இவர் புத்தருக்கு முன் வாழ்ந்த மனிதர் ...

புத்தமதத்தில் சாதுக்கள் உண்டு துறவிகள் சொல்லவேண்டிய அவசியமே இல்லை

 ..அதிகம் உண்டு ...

புத்தர் மட்டுமே புத்தமததிர்க்கு சொந்தம் கொண்டாட முடியாது ...

புத்தர் தமக்கு ஞானம் கிடைபதர்க்கு முன்னாள்

போதி சத்துவர் என்று தன்னை தானே அழைத்து கொண்டார் ...

யார் இந்த போதி சத்துவர் புகைபடத்தில் முதலாவதாக இருப்பவர் தான் ஆகவே புத்தருக்கு முன்பே இவர் வாழ்ந்துள்ளார்

என்பதை அறிந்து கொள்ளுங்கள் ...

புத்தரின் சமுதாய சிந்தனை சீர்திருத்த எண்ணம் தான் அவரை மக்களை விட்டும் தனிமை படுத்தியது ..

ஏறக்குறைய முஹம்மது நபி மக்களின் அனாசார விஷயங்களை விட்டும் குகையில் தனிமையில் ஒதுங்கியது போன்று

இருவருக்கும் ஏறக்குறைய ஒரு ஒற்றுமை உண்டு ..

இருவரும் மக்களின் தீய செயலை தடுக்க முடியாமல் தான் தனிமையில் ஒதுங்கினார்கள்

பிறகு தான் முஹம்மது நபிக்கும் ஞானம் கிடைத்து

அதே போன்று புத்தருக்கும் ஞானம் கிடைத்தது ..

புத்தரின் முக்கியமான போதனைகளில் 4 போதனைகளை
புத்த மதம் சொல்லுகிறது ...

இதை உயர் உண்மை என்று புத்த மத மக்கள் அழைகின்றனர்

கிருஸ்துவ மதத்தில் ஏசு கிறிஸ்து (அலைஹிஸ்ஸலாம்) மனிதர்களின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெலுந்தார்

என்பதை ஏற்று நம்பினால் தான் கிருஸ்துவனாக முடியுமோ அதே போன்று புத்த மதத்தின் இந்த தத்துவம் உயர் உண்மையை நம்பினால் தான் புத்தமதத்தவர்.

அப்படி என்னதான் போதனை என்கிறீர்களா இதோ..

1 .மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது

2 ,அந்த துன்பத்திற்கு காரணம் தன்னலமும் ஆசையும்

3 மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்

4 மனிதன் தன்னலம் ஆசையில் இருந்து தப்பிக்க

எட்டு வகையான பாதை உண்டு

அது

நேர்மையான கருத்து
நேர்மையான எண்ணம்
நேர்மையான பேச்சு
நேர்மையான செயல்
நேர்மையான வாழ்க்கை
நேர்மையான முயற்சி
நேர்மையான சித்தம்
நேர்மையான தியானம்
இது தான் அந்த 8 பாதை

இதில் என்னை வணங்குங்கள் அதுவே சிறந்தது என்று புத்தர் கூறவில்லை...

ஆனால் புத்தர் பிரசாரம் மேற்கொண்டார்
அப்படியானால் ??

அதே போன்று மனிதன் தன்னலம் ஆசியில் இருந்து தப்பிக்க 8 வகையான வழியில் இறுதியில்
தியானம் என்று கூறுகிறார்

யாரை நினைத்து தியானம் ???

கடவுளை ..

எந்த கடவுளை ??

புரிகிறதா ??

என்னை வணகுங்கள் உங்களுக்கு சகல செல்வாக்கும் கிடைக்கும் என்று கூறவில்லை

இருந்தும் தியானம் என்று கூறும் போதே ஏதோ கடவுளை தான் சொல்லுகிறார்..

அந்த கடவுள் யார் என்று அன்றைய கால மக்களுக்கு தான் தெரியும்

ஏன் என்றால் புத்தரின் போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுத படவில்லை

அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் கழித்தும் எழுத படவில்லை..

புத்தருக்கு முன் பல பேர் புத்தராக இருந்துள்ளார்கள் அதில் முக்கியமானவர் காசாயா புத்தர்

ஆக புத்தமததில் புத்தர் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவர் கிடையாது...

புத்தர் என்றாள் கடவுள் என்று அர்த்தமும் இல்லை..

புத்தமதத்தின் புனித வேதங்களில் முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு வந்துள்ளது...

அதில் முக்கியமானது சக்கோவத்தி சின்ஹனா சினந்தா என்ற புத்த மதத்தின் புனித வேதத்தில்

மைத்திரி என்ற பெயரில் ஒரு புத்தர் வருவார் அவர் என்னை போன்று பல சீடர்களை வைத்து இருப்பார்கள்

 அவர் ஒரு மதத்தை பிரசாரம் செய்வார் அது ஆரம்பத்திலும் இறுதியிலும் பிரகாசமாக இருக்கும் என்று புத்தர் கூறுவதாக வருகிறது..

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் முஹம்மது நபியை மைத்திரியான புத்தர் என்று கூறியுள்ளார்...[ஆதாரம் கீழே]

அப்படி என்றால் புத்தர் என்பது கடவுளை குறிக்கும் சொல் அல்ல...

அதேபோன்று புத்தாஹமத்தில் ஒரு செய்தி வரும்

புத்தர் நேரடியாக முஹம்மது நபி அவர்களை பற்றி பேசுவார்..

அதாவது நான் இறுதி புத்தர் அல்ல எனக்கு பிறகு இறுதியும் கடைசியுமான ஒரு புத்தர் வருவார் அவர் எப்படி பட்டவர் என்பதை பற்றி அடையாளம் சொல்வார் புத்தர்..

ஆகவே புத்தர் கடவுளின் பெயர் இல்லை..

முஹம்மது நபிக்கூட புத்தர் தான் என்று புத்தரே கூறியுள்ளார்...

அதே போன்று புத்த மதத்தை வளர்த்தவர் யார் என்று தேடி படித்தீர்களாயின்

அசோகராக தான் இருப்பார்.

அசோகரால் தான் புத்த மதம் சீனா மற்றும் உலகெங்கும் பரவியது..

இங்கே புத்தருக்கும் அசோகருக்கும் உள்ள கால இடைவெளி
ஏறக்குறைய 600 ஆண்டுகள்..

அப்படியானால் யார் மீது தவறு?
புத்தர் எங்கே கடவுளாக்கப்பட்டார்??

இது குறித்து இன்னும் ஆய்வு செய்யலாம் இருந்தாலும் இதுவே போதும்

இனி உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்...

புத்தர் கடவுளா ? தூதரா ? மனிதரா ?

Mohamed Shajahan [SHAMS DEEN]

Buddhism vs islam: http://youtu.be/0SgWZh9rRaI

https://en.m.wikipedia.org/wiki/Nikaya_Buddhism

https://en.m.wikipedia.org/wiki/Buddhism

No comments:

Post a Comment

 
back to top