முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவது பெண் அடிமைத்தனம் என்றால்?
கன்னியாஸ்திரிகள் முக்காடு அணிவது என்ன மாதிரியான அடிமைத்தனம் ....
முஸ்லிம் பெண்கள் ஆடையில் உடலை மறைத்து முக்காடு அணிந்து அபாயா போன்ற ஆடை வகைகளை அணிந்து இருக்கும் புகைபடத்தை பதிந்துசில அறியாத கிருஸ்துவ நண்பர்கள்கிண்டல் செய்த பதிவை பார்க்க நேரிட்டது ..
அந்த சகோதர்களுக்கு பதிலாகவும் மற்றும் கிருஸ்துவ நண்பர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த பதிவை எழுதிகிறேன் .....
முதல் விஷயம் ஆடை உணவு போன்ற அத்யாவசிய விஷயங்கள் தனி மனித சுதந்திரம் ,,,,
இதில் யாருக்கும் தலையிட அனுமதி இல்லை
நான் மேலே பதிந்த தலைப்பு தவறு
ஆடையில் அடிமைத்தனம் கிடையாது ,ஒரே சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பெண்கள் ஒரு ஆடையும் சில பெண்கள் ஒரு ஆடையும்
ஏற்ற இரக்கத்தை காண்பிக்க உடுத்தினால் மட்டுமே அடிமைத்தனம் ஆகும்
இஸ்லாத்தில் அணைத்து பெண்களும் உடலை மூடும் படியான ஆடை அணிய சொல்லும் பொழுதுஇது அடிமைத்தனம் அல்ல
அதே வேளையில் அந்த பெண்களை இது போன்ற ஆடைதான் உடுத்த வேண்டும் என்று நிர்பந்திப்பது தவறு ...
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பிரச்னைக்கு அரசாங்கம் சட்டம் போட்டாலே தவிரஒரு முஸ்லிம் பெண் உடலை மறைக்கும் ஆடை அணியாமல் வீதியில் நடந்தால் அவளை கொண்டு வந்து மரணதண்டனை கொடுக்க இஸ்லாம் சொல்லவில்லை ....
தமிழகத்தில் பதர் சயீத் இந்தியாவில் தஸ்லிமா நஷ்ரீன் போன்றோர்கள் இஸ்லாமிய ஆடை அணியாமல் வளம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
[ தஸ்லிமா நஸ்ரினை எதிர்த்ததற்கு காரணம் அவர் எழுதிய புத்தகம் தானே தவிர அவரின் 5 திருமண விஷயத்தை விமர்சித்தோ ஆடை விஷயத்தை விமர்சித்தோ எதிர்க்கவில்லை]
இன்னும் எத்துனையோ முஸ்லிம் பெயர் தாங்கி நடிகைகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ..
யாரையும் எங்கேயும் போய் இஸ்லாமிய ஆடை அணிய மறுக்கிறாள் என்று சாகடிக்கவில்லை ....
சாகடிக்கவும் மார்க்கத்தில் அனுமதியில்லைஆனால் இஸ்லாம் கட்டளைஇடுகிறது இது போன்று ஆடை அணிய
குர்ஆன் னில் 24 வது அத்யாயம் 30 வது வசனம்
அதே போன்று 24 வது அத்யாயம் 31 வது வசனத்தில் பெண்களே உங்கள் முந்தானைகளை உடல்களில் சரியாக போடுங்கள் என்றும்33; 59 இல் கூறுகிறது ..
அதே வேளையில் முகத்தை மறைக்கவேண்டும்எனபது கட்டாயம் இல்லை ..
முஹம்மது நபி காலத்தில் எத்துனையோ பெண்கள் தங்கள் முகத்தை தெரியும் பொருட்டு நபியிடம் கேள்வி கேட்டதாக வரலாறு உண்டு ...
இஸ்லாமிய ஆடை பற்றி எத்துனையோ பேர் பேசிவிட்டார்கள்என்னஎன்ன நன்மைகள் உள்ளது என்று ஏற்கனவே பேசிவிட்டார்கள் ..நான் அதை பற்றி பேசவில்லை மாறாக
பைபிள் கூறும் அபயாவை பார்க்க போகிறோம் ........
பைபிளின் அழகான வசனம் ..
புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவல்ல ,ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள் ,புருஷன் ஸ்திரீக்காக ஸ்ரிஸ்த்டிக்க பட்டவனில்லை ஸ்திரேயே புருஷனுக்காக ஸ்ருச்திக்க பட்டவள் ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டு கொள்ளவேண்டும் ,1 கொரிந்தியர் .11.4-10
ரெபெக்கலும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கை கண்டபொழுது ஊழிய காரனை நோக்கி அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதர் யார் என்று கேட்டாள் ,
அவர் தான் என் எஜமானன் என்று ஊழியக்காரன் சொன்னான் அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டு கொண்டால் ..ஆதியாகமம் 24;63-65
பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ள அழகான வசனம் இது
இதையே கர்த்தருக்கு தன்னை அர்பணித்த கிருஸ்துவ கன்னியாஸ்திரிகள் கடைபிடிகின்றனர்
[உதாரணம் அன்னை தெரசா]
இது சொல்ல கூடிய கருத்து பெண்கள் முக்காடு அணிவது இதையே தான் இஸ்லாமும் சொல்லுகிறது ...
எந்த ஆடவனும் தனது தங்கையின் உடலையோ மனைவியின் உடலையோ ஆங்காங்கு காண்பிப்பது போன்று உடுத்துவதை விரும்ப மாட்டன் ,,,,,,
ஒரு வேலை நன்றாக ஆடை அணிந்தாலும் அந்த பெண்களுக்கு தெரியாமல் விலகிவிட வாய்ப்பு உண்டு ..
அந்த இடத்தில தமது கேவலமான இச்சையை பார்த்து போக்கி கொள்ள தான் நாடுவானே தவிர சகோதரியே உங்களின் உடையை சரி செய்யுங்கள் என்று எவனும் கூற மாட்டான்
நமேக்கேன் வம்பு என்ற ரீதியிளையாவது பேசாமல் போய் விடுவான்
இதை தவிர்க்கவே இஸ்லாம் ஆடை கண்ணியம் பேண சொல்லுகிறது ..இயற்கையாய் என் மனைவி எனக்கு மட்டும் என்று கணவன் நினைப்பான்
அந்த இயற்கையை இஸ்லாம்சொல்லுகிறது ,...
அவ்வளவுதான்
இனிமேல் விமர்சனம் செய்யும் தொப்புள் கொடி கிருஸ்துவ நண்பர்கள் தங்களின் வேதத்தில் உள்ளவசனத்தையும் சேர்த்து விமர்சனம் செய்யுங்கள் .....
Related Post on Bible
quran and science [அல் குர்ஆனும் அறிவியலும்]
No comments:
Post a Comment